
நாம் தமிழர் கட்சியின் சீமான் வரம்பு மீறி விஷக் கருத்துகளைப் பரப்பிக் கொண்டு வருவதாகவும், உண்மைக்கும் அறிவுக்கும் மாறான கருத்துகளை அப்பாவி மக்களிடமும், இளைஞர்களிடம் மீண்டும் மீண்டும் கூறி, அவர்களை மதிமயக்கி மூளைச் சலவை செய்து, நாட்டுக்கு விரோதமானவர்கள் ஆக்கி விடுவதாகவும் சமூகத் தளங்களில் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சீமான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப் பட வில்லை என்றால், இளைய சமுதாயத்தின் மூளைகளைச் சிதைத்து, மிகப் பெரும் அளவில் நாடு சேதத்தைச் சந்திக்க வைத்து விடுவார் என்று மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கும் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கும் டேக் செய்து டிவிட்டர் பதிவுகளில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, ராஜீவ் காந்தியை நாங்கதான் கொன்றோம் என்று, திடீரென திகில் பரப்ப சீமான் பின்னணி என்ன…? சீமான் யார் சொல்லி இவ்வாறு இயக்குகிறார்?மலேசியாவில் விடுதலைப் புலி ஆதரவாளர் என்று, சீமானுடன் புகைப்படம் எடுத்து சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்ட உயர்பதவிகளில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் கைது செய்யப் பட்ட நிலையில் தமிழகத்தில் சீமானின் அரசியல் மேடைப் பேச்சு வேறு வகையில் செல்வதன் காரணம் என்ன? என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றன.
ராஜீவ நாங்கதான் கொன்றோம் என்றால், நாங்க என்றால் யார் என்ற கேள்வி எழுப்பப் படுகிறது. அதற்கு முன்பும் பின்பும் விடுதலைப் புலிகளின் பெயர்களை சீமான் சொல்வதால், அது விடுதலைப் புலிகள் தான் என்று சிலர் கூற, நாம் தமிழர் கட்சியினரோ, ராஜீவ கொன்னது தமிழர்கள்தான்… தெலுங்கனோ, மராட்டியனோ, கன்னடனோ, சிங்களவனோ கொல்லவில்லை, தமிழந்தான் கொன்னான் என்று புது விதத்தில் திசைதிருப்பல் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
தமிழர் என்று பொத்தாம் பொதுவாக, தமிழர் இனத்தையே கொலை கார இனம் என்று சீமானின் அடியாட்கள் கூறுவதால், உண்மையாகவே தமிழர்களாக, செழுமையான கலாசாரப் பின்புலத்தில் உள்ள உண்மைத் தமிழர்கள் பெரிதும் வருத்தம் அடைந்துள்ளனர். பொறுக்கிகளும் கொலைகாரர்களும் பிரிவினைவாதிகளும் தாங்கள் தமிழர் என்று கூறிக் கொண்டு ராஜீவைக் கொன்னது தமிழர்கள்தான் என்று வீராப்பு பேசுவதை கண்டும் காணாமல் மத்திய அரசு இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது என்று கூக்குரல் கொடுக்கின்றனர்.
மாநில அரசு ஒரு முதுகெலும்பற்ற அரசு என்பது பலமுறை நிரூபிக்கப் பட்டிருப்பதால், அதிமுக., திமுக., கூட்டுக் களவானித்தன திராவிட இயக்கங்களின் ஆட்சியை நம்புவதற்கில்லை என்றும், மத்திய அரசுதான் தேசப் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள்கள் முன்வைக்கப் படுகின்றன.
மாநில அரசின் சார்பில் வாய் திறந்த ஒரே நபராக, அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மட்டுமே, சீமானுக்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார் என்றாலும், இதுவரை சீமான் மீது நடவடிக்கை எடுக்க எந்த வித நகர்த்தலையும் மாநில அரசு மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை நிலை!
சீமான் இன்றைய ஸ்பெஷல்…
வாடகை கொடுக்க வக்கு இல்லாதவன்… யோக்கியன்போல பேசுகிறான்… நாங்களும் பச்சைத் தமிழர்தான்… அதென்ன இவனுங்க மட்டும்தான் தமிழர்களா? அதென்ன நாம் தமிழர்…? 4 ரவுடிப் பயலுஹள வெச்சிக்கிட்டு வெளிநாடு போய் பணவசூல் செய்துக்கிட்டு..இருக்குறவன் எங்களைப் பத்தி பேசலாமா? இப்படிப் பேசிப் பேசியே… விடுதலைப் புலிகளை அழிச்சிப் புட்டீங்க… நீ சந்தோஷமா இருக்க அடுத்தவனை ஒழிச்சிட்டிருக்க… ஒவ்வொரு நாட்டிலும் வப்பாட்டி வெச்சிருக்க… உன்னை நம்பியிருந்தவங்களாம் விதவையா இருக்காங்க… என்று ராஜேந்திர பாலாஜி சீமானை கிழித்துத் தொங்கவிடுகிறார்!
சமூகத்தளங்களில் காணும் சில கருத்துகள்….
மோரில் விசம் வைத்து வீரப்பனை கொன்றவன் விஜயகுமார் IPS
இதெல்லாம் ஒரு வீரமா
இதில் இவர் மொட்டை வேற போட்டுக்கிட்டார் நாங்கெல்லாம் அப்பன் செத்தா தான் மொட்டை போடுவோம் இவர் ஏன் போட்டார்னு தெரியல
ஒரு நேர்மையான அதிகாரியை இப்படி தரமில்லாமல் பேசுறான் இந்த பேடிப்பய
இப்பவும் தமிழக அரசு வழக்கம் போல மிக்சர் திங்கும்னு நினைக்கிறேன்
அடே வெட்டி வெண்ணை பாலில் மோரில் விசும் கலக்க முடியாதுடா அப்படி கலந்தால் அதோட தன்மையும் நிறமும் மாறிவிடும்
உங்க அப்பனுக்கு நீ மொட்டை போடுவது சுடுகாட்டில்
தன்னோட லட்சியம் நிறைவேற உறுதுணையா இருந்த ஆத்தா பண்ணாரிக்கு மொட்டை விஜயகுமார் போட்டது முடி காணிக்கை
எதையாவது உளறாத
இன்னிக்கு முதல்வரா 1000 போலீஸோட வலம் வருகிற எடப்பாடிக்கு ஆட்சி போண மறுநாள் பக்கத்து வீட்டுகாரன் ஏப்பா பழனிச்சாமி என்பான்
அதற்கு மாற்றாக உள்ள சீனி சக்கர சித்தப்பா ஸ்டாலின் சட்டை பைய கிழித்த மாதிரி சட்டைய கிழித்து கொண்டு செல்வார் விரைவில்
என் மக்களே நம் தமிழகம் முன்னேற வேண்டும் என்றால் முதலில் இந்த அதிமுக திமுக வை ஒழிக்கனும்
ராஜீவ் காந்தி கொலைக்கும் தமிழர்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. விடுதலைப் புலிகளை தமிழர்கள் ஆதரிக்கவும் இல்லை.
பொதுமேடைகளில் தவறான கருத்துக்களை பரப்பும் இவனைப் போன்ற கயவர்களை காவல்துறை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.



