
நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
நெல்லை மாவட்டம் குற்றாலம் செங்கோட்டை தென்காசி ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது
குற்றால மலைப்பகுதியில் மழை நீர் பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித் தீர்ப்பதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் நேற்று காலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர்
இந்நிலையில் நேற்று மதியம் சிறிது நீர்வரத்து குறைந்து பாதுகாப்பான அளவில் இருந்ததை அடுத்து குளிப்பதற்கு போலீசார் அனுமதித்தனர். இருப்பினும் மாலை நேரம் கன மழை பெய்ததால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.

இதையடுத்து நேற்று மாலை விதிக்கப்பட்ட தடை இன்று காலை வரை தொடர்ந்தது



