
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசி செங்கோட்டை குற்றாலம் கடையநல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது குற்றால அருவிக்கு நீர்வரத்து வரும் மழை பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதையடுத்து பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் இரண்டாவது நாளாக தொடர்ந்து தடை விதித்துள்ளனர்
இந்நிலையில் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்



