
வள்ளுவரைப் போற்றும் வகையில், தஞ்சை பிள்ளையார் பட்டி என்னும் பகுதியில் திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை மீது நேற்று இரவு மர்மநபர்கள் சாணத்தை அடித்துவிட்டு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, திருவள்ளுவரின் சிலையின் கண்களில் கருப்பு நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். சாணம் பூசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இது வரை எந்த மதங்களையும் சாராமல் போற்றப் பட்டு வந்த திருவள்ளுவரை, ‘அவர் காவி நிற உடையே அவர் வாழும் போது அணிந்திருந்ததாகவும், அதனால் அவர் இந்து மதத்தை தான் போற்றினார்’ என்னும் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதனையடுத்து அங்கு வந்த வல்லம் காவல்துறையினர், அவமதிக்கப்பட்ட வள்ளுவர் சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்தனர்.
திருவள்ளுவரைப் பற்றிய எந்த தகவலும் யாருக்கும் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில், இத்தகைய கருத்துக்கள் எழுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வள்ளுவரின் சிலை மீது சாணம் பூசியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த திருவள்ளுவர் சிலையின் கல்வெட்டில், இன்னா செய்தாரை ஒருத்தல், அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறள் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
— Pramod Madhav (@madhavpramod1) November 4, 2019
புன்கணீர் பூசல் தரும்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. ???? pic.twitter.com/Oy7yuDBsT7