
அயோத்தி தீர்ப்பு நாளை வெளியாவதை யொட்டி நெல்லை மாநகரத்தில் 1200 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மாநகர பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தபட்டுள்ளதால் அமைதியான முறையில் நாளைய தீர்ப்பை மக்கள் எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் (சட்டம் மற்றுக் ஒழுங்கு) சரவணன் தகவல் வெளியிட்டார்.
இதனிடையே சமூக வலைதளங்களை கண்காணிக்க தமிழக போலீசார் முடிவு. செய்துள்ளனர்
தேவையில்லாத வதந்திகள், அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை. விடுக்கப்பட்டுள்ளது
தீர்ப்பு குறித்து தவறான விஷமக் கருத்துக்களை பரப்பினால் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.



