மதுரை: உங்க கொம்பன் படம் வெளியானால் சாதிக் கலவரம் வராமல் தடுக்க முடியுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்‘ பட கதைக்கும் தலைப்புக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பிட்ட ஜாதியை குறிப்பிடுவதாக இதன் கதை அமைக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என தணிக்கை குழுவினருக்கு கடிதம் எழுதி இருந்தார். வரும் 2ம் தேதி இந்தப் படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால், படத்தை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக இதை எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதையடுத்து இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணசாமி தரப்பு, “இந்தப் படம் வெளியானால் தென்மாவட்டங்களில் நிச்சயம் சாதிக் கலவரம் ஏற்படும்,” என்று தெரிவித்தார். அரசு தரப்பு வழக்கறிஞரோ, “அப்படி எதுவும் நிகழாது” என்றார். உடனே நீதிபதி தமிழ்வாணன், “சாதிக் கலவரம் வராது என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா?” என்று அரசு வழக்கறிஞரிடமும், காவல் துறையினரிடமும் கேட்டார். இந்தக் கேள்விக்கு உடனே பதிலளிக்க வேண்டும். பிற்பகல் நீங்கள் பதில் அளித்த பிறகு தீர்ப்பு கூறப்படும் என்றார். இந்நிலையில், இன்று பிற்பகலுக்குப் பின்னர் படம் வெளியாக தடை விதிக்கப்படுமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.
உங்க படம் வெளியானா சாதிக் கலவரம் வராம தடுக்க முடியுமா?: நீதிபதி கேள்வி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories