
இன்று சென்னை ராயப்பேட்டையில் தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண நடவடிக்கை, உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்; கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்பின் மீதான ஐயப்பாட்டை மத்திய அரசு தெளிவுபடுத்திட வேண்டும்…
மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவிகிதம் தமிழக இளைஞர்களை நியமிக்க வேண்டும். கீழடி அகழாய்வுப் பணியைத் தொய்வின்றி மத்திய மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும்….
புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தல் உள்ளிட்ட 20 தீர்மானங்களை தி.மு.க நிறைவேற்றியுள்ளது.
முக்கியமாக, தி.மு.க-வில் நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும் தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் இருந்த அதிகாரம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.