
திமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்றும், திமுக., சமூக நீதி என்று கூறி இரட்டை வேடம் போடுவதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. அதை அடக்குவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தது திமுக.,!
பாமக., நிறுவுனர் ராமதாஸ் கிளப்பிய ஒரு தீப்பொறி, பாஜக., மாநில செயலர் மதுரை பேராசிரியர் சீனிவாசனால் மேலும் பெரிதாக்கப் பட்டது. தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையத்தில் பஞ்சமி நிலம் குறித்து விசாரித்து அறிய வேண்டும் என்று புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது ஆணையம். ஆனால், அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது.
மேலும், அரசு நிர்வாக ரீதியில், திமுக.,வுக்கு உதவுவது போல் கூறப் படுகிறது. இதனை இன்றைய திமுக., பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலினே உறுதி செய்திருக்கிறார்.
“முரசொலியை மூடுவோம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார்; அதை பூட்டுப் போட விடுவோமா? முரசொலி இருக்கும் நிலம் பஞ்சமி நிலம் என அரசு கண்டுபிடித்திருந்தால், அதை வெளியிடாமல் இருப்பார்களா? – என்று கூறியிருக்கிறார்.
இதன் மூலம், அதிமுக., அரசு, திமுக.,வை பிரச்னையில் இருந்து காப்பாற்ற ரகசிய வேலைகளைச் செய்து வருவது, ஸ்டாலின் வாக்கில் இருந்தே வெளிப்பட்டிருக்கிறது என்று கூறுகின்றனர்.
இதனிடையே, இதை உறுதிப் படுத்துவது போல், பாஜக.,வைச் சேர்ந்த தலித் தலைவரான தடா பெரியசாமி, தமிழக தலைமைச் செயலாளர் சமர்ப்பிக்கும் ஆவணங்களில் தற்போதைய சென்னை மாவட்டத்தில் பஞ்சமி நிலம் இல்லை என தகவல் கொடுத்து விடக் கூடாது… என்று தனது ஐயத்தையும் சேர்த்தே வெளிப்படுத்தி, கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது…
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பற்றிய ஆவணங்களை வருகிற 19-11-2019 அன்று நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நான் பஞ்சமி நிலம் பற்றிய தகவல்கள் தமிழ்நாடு முழுவதும் திரட்டி வைத்துள்ளேன் அத்தகவல்களை 19-11-2019 அன்று நேரில் சமர்பிக்க என்னை அழைக்க வேண்டுமென்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு மனு கொடுத்துள்ளேன்.
தமிழக தலைமைச்செயலாளர் சமர்ப்பிக்கும் ஆவணங்களில் தற்போதைய சென்னை மாவட்டத்தில் பஞ்சமி நிலம் இல்லை என தகவல் கொடுத்து விடக் கூடாது. பழைய செங்கல்பட்டு ஜில்லா ஆவணங்களில் இருந்து சமர்பிக்க வேண்டும். அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. – என்று தடா பெரியசாமி கூறியுள்ளார்.
தடா பெரியசாமி கொடுத்துள்ள மனு…
