திருவாரூர் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: இரா.முத்தரசன் கோரிக்கை

திருவாரூர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண தர வேண்டும் என்று  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் அதில்,

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக் கழக கட்டிடம் இடிந்து ஐந்து பேர் பலியானதும், பலர் படுகாயமடைந்துள்ளதும் மிகுந்த கவலை அளிக்கின்றது.
ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிடு செய்து கட்டுமானப் பணிகள் கடந்த 2009ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.
கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் 2014ல் இரு முறை குடியரசுத் தலைவரின் வருகைக்கு ஏற்பாடு செய்து ரத்து செய்யப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டும்.
கலவைப் பொருள்கள் உரிய வகையில் பயன் படுத்தாமலும், அவசர கதியில் பணிகளை முடிக்க மேற் கொண்ட முயற்சியாலும், பணி புரியும் தொழிலாளர்களை ஒய்வின்றி இரவு பகலாக பணிகளில் ஈடுபடுத்திய காரணத்தாலும் விபத்து நடை பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
ஒப்பந்தக் காரரின் பொறுப்பற்ற செயலாலும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவும் விலை மதிக்க முடியாத ஐந்து மனித உயிர்கள் பலியாகி உள்ளன. 16க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த இருவர், உத்திரபிரதேசத்தை சேர்ந்த இருவர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இறந்துள்ளனர்.  இறந்தவர்களில் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதுடன் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.
காயமடைந்தவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பும் வரை உயர் மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன் அவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் நிதி வழங்கிட வேண்டும்.
மத்திய பல்கலைக் கழக கட்டுமான பணிகள் தொடங்கிய நாள் முதல் பெரும் ஊழல் முறைகேடுகள் நடை பெற்று வருவதன் காரணமாக இவ்விபத்து நடை பெற்றுள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். விபத்து நடைபெற்றது குறித்தும், கட்டுமான பணிகள் நடை பெறுவது குறித்தும் பணியல் உள்ள உயர்நீதி மன்ற நீதிபதியைக் பொண்டு முழுமையான விசாரனை நடத்தப்பட வேண்டும்.
தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். இனியும் இத்தகைள கோர விபத்துகள் நடைபெறாமல் இருக்க உ நடவடிக்கைகளை அரசு மேற் கொள்ள வேண்டும். – என்று கேட்டுக் கொண்டுள்ளார்.