
உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனசூர்கோட்டை பகுதிக்கு உள்ளிட்ட எல்லப்பநாயக்கன்பாளையத்தில் விவசாயிகள் நிலத்தில் நெல் சாகுபடி செய்து உள்ளனர்.
இந்நிலையில், நெற் பயிர்களை பலவிதமான பூச்சிகள் தாக்கி வருகிறது என்றும், பூச்சிகளை கட்டுப்படுத்த தீவிர முயற்சி எடுத்தும் கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்ததாகவும் கூறிகின்றனர்.

தொடர்ந்து, விளக்கு பொரி லைட் வைத்து பூச்சிகளை ஒழிக்க வேண்டும் என்று, வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் அணுகினராம்.

அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர், அவர்கள் மூலம் பெறப்பட்ட விளக்குப்பொரி லைட்டை வாங்கி வந்து வயலில் வைத்து இயக்கி வைத்துள்ளார் கோ.பழனி.



