நாளை தவறவிடாதீர்கள்! சிவனை தரிசித்து சிறப்புப் பெறுங்கள்!

Published:

sani prathosham - 2026

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷ வழிபாடு. ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது.

தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவ பூஜை செய்த பலன் உண்டாகும். சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை.

எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது. அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியால், சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர். இந்த தவறை பிரம்மன் எடுத்துரைத்தார். வெட்கி தலைகுனிந்த தேவர்கள் அனைவரும் சிவபெருமானை தரிசித்து மன்னிப்பு கோரினர்.

மகிழ்ச்சி அடைந்த ஈசன், திருநடனம் புரிந்தார். நந்தி தேவர் சுத்த மத்தளம் வாசிக்க, சரஸ்வதி வீணை மீட்ட, மகா விஷ்ணு புல்லாங்குழலையும், பிரம்மன் தாளத்தையும், எண்ணற்ற இசைக்கருவிகளை பூதகணங்களும் வாசிக்க ஈசனின் இனிய நடனத்தை அனைவரும் கண்டுகளித்து பெருமானை துதித்து பாடி வணங்கினர்.

ஈசன் நடனம் புரிந்தது திரயோதசி தினத்தில் சனிக்கிழமை. எனவே தான் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்று சிவன் ஆலத்திற்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்தால் 5 வருடம் ஆலயம் சென்ற பலன் கிட்டும்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

சனி மகா பிரதோஷம்????. 126 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சனி பிரதோஷம். குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்ந்த(குரு பெயர்ச்சி)பின்பு வரும் முதல் பிரதோஷம் அதுவும் சனி பிரதோஷம்.

அதே போன்று கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்த தினத்ததிற்கு (தீபாவளி) பிறகு வரும் பிரதோஷம் அதுவும் சனி பிரதோஷம்.

இவை மட்டுமின்றி முருகப்பெருமான் சூரனை வதம் செய்த(சூரசம்ஹாரம்)பிறகு வரும் சனி மகா பிரதோஷம். இவை அனைத்தும் 126 ஆண்டுகளுக்கு முன்பு சனி பிரதோஷம் ரேவதி நட்சத்திரத்தில் வந்தது.

அந்த அறிய நிகழ்வு மீண்டும் தற்போது 09-11-2019 வந்துள்ளது.
பலன்கள்:

()குரு பெயர்ச்சிக்கு பிறகு வரும் சனி பிரதோஷம் என்பதால் குருவின் பார்வை 12ராசிக்கும் மற்றம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து ராசிகாரர்களும் சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்தல் நன்மை தரும்

()திருமண தடை நீங்கும்
()கடன் சுமை அகலும்

()மாணவ மாணவிகளுக்கு கற்கும் ஆர்வமும் நியாபக திறனும் அதிகரிக்கும்.
இந்த மகத்துவமான சனி மகா பிரதோஷத்திற்கு அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறையருள் பெற்றிடவும்

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img