
மிஸாவில் தான் கைது செய்யப் பட்டார் மு.க.ஸ்டாலின் என்றால், ஏன் உடனே காங்கிரஸுடன் கைகோத்து தேர்தலில் நின்றீர்கள் என்று கேட்கிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
இரு நாட்களில் தகுந்த பதில் தரப்படும் என்று கூறிவிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் சந்தித்துப் பேசிய பின்னர் அமைதியாகிவிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தற்போது மிஸா விவகாரத்தில் தனது டிவிட்டர் பதிவில் பதிலளித்திருக்கிறார்.
முன்னாள் நீதிபதி சந்துரு கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் விதத்தில் அவர் பதிவிட்ட டிவிட்டர் பதிவுகளில்… மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டிருப்பவை….

ஆனைக்கும் அடி சறுக்கும் ! நான் மதிக்கும் நீதியரசர் சந்துரு அவர்கள் நான் பேசியதை முழுமையாக கேட்காமல் இந்த கருத்தைப் பதிவிட்டதில் வருத்தம். மிசா காலத்தில் ஸ்டாலின் அவர்கள் ஓராண்டு சிறையில் இருந்ததையோ, அவர் சிறையில் தாக்கப்பட்டதையோ நான் மறுக்கவில்லை. என்னுடைய கேள்வி எல்லாம்….
எதற்காக ஸ்டாலின் அன்று சிறையிலிடப்பட்டார் என்பது குறித்து. ஐனநாயகத்தைக் காப்பாற்றவோ, அவசர நிலையை எதிர்த்தோ எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கு பெறவில்லை என்பது கலைஞர் உட்பட பலரும் ஏற்றுக் கொண்ட உண்மை. நான் சொன்ன காரணம் எங்கள் மாவட்டச்செயலர் பாலகங்கா முதல் திமுகவில் இன்று….
முன்னாள் அமைச்சர்கள்/MLAக்கள் நால்வர் பொது வெளியில் பேசிய கருத்துக்களே ! அவருடைய கைது MISA சட்டத்தின் செக்ஷன் 3(1)(a)இல் உள்ள 3 உட்பிரிவுகளில் எந்த அடிப்படையில் நிகழ்ந்தது என்பதை Detention order மூலம் மட்டுமே அறிய முடியும். அமெரிக்கத் தூதுவர் ஆண்ட்ரூ சிம்கின்ஸ் …..
தன் தலைமைக்கு அனுப்பி #WikiLeaks வெளிப்படுத்திய ஆதாரங்களைத் தந்து கொண்டிருக்கும் திமுகவினர் ஏன் எந்த காரணமும் இல்லாமல் அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் ஸ்டாலின் அவர்களைக் கைது செய்தது என்ற நிலைப்பாட்டை எடுப்பதில்லை? தியாக வரலாறு என்ற புனைவு தகர்ந்து விடும் என்று பயமா ? அல்லது,…
இவ்வளவு கொடுமைகள் திமுக அனுபவித்தும் 1977 தேர்தலில் மக்கள் ஏன் தோல்வியைத் தந்தார்கள் ? அடுத்த 2 ஆண்டுகளில் இவ்வளவு கொடுமைகள் செய்த அதே காங்கிரஸ் உடன் உறவு கொண்டது இவ்வளவு தியாகம் செய்த தொண்டர்களுக்கு செய்த துரோகம் அல்லவா? #Height_of_Hypocrisy