பணி காலம் முடிந்தும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, பதவிகளில் அமர்த்தி இருந்தது. அதைப் போன்று பதவியில் அம்ர்த்தப்பட்ட கிட்டத்தட்ட 30 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தமிழக அரசில் வெவ்வேறு பதவிகளில் இருக்கின்றனர். இந்நிலையில், இவர்கள் அனைவரையும் ஒரே உத்தரவின் மூலம் பதவி இழக்கச் செய்ய உள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது.
இந்த விஷயம் தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் முதல்வரின் செயலாளர் வெங்கடரமணா, மக்கள் தொடர்புத் துறையின் செயலாளராக இருந்த எழில் போன்றவர்களும் இந்த திடீர் அறிவிப்புப் பற்றி முன்னரே தெரியவேதான், அவர்களாகவே தாங்கள் வகித்து வந்த பதவிகளை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
சசிகலா வரும் 9-ம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த அதிரடி தகவல் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.



