ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள், திருமலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, திடீரென தீப்பற்றியதால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், உடனடியாக பதறியடித்துக்கொண்டு அறையிலிருந்து வெளியே ஒடி வந்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதியில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியில் பயங்கர தீ!
Popular Categories



