புது தில்லி :
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவிருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவிருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கேற்க இயலவில்லை என பாரதியார் பல்கலை.,க்கு விளக்கம் அளித்துள்ளார் ஆளுநர். இருப்பினும், பாரதியார் பல்கலை. விழா திட்டமிட்டபடி நாளை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில், ஆளுநரின் பணி அதிகரித்துள்ளதால், இந்த முடிவு இருக்கக் கூடும் என்று தெரிகிறது.