தமிழகம் முழுதும் பரவலாக கனமழை! தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு!

Published:

IMG 20191201 WA0020 - 2026

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

சென்னையில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் கடல் சீற்றமாக காணப்படும். சென்னையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.

சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

வேலூர்: காட்பாடி, அணைகட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மழை

விருதுநகர்: அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை

புதுக்கோட்டை: ஆலங்குடி, அன்னவாசல், சித்தனவாசல், கறம்பக்குடி, விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை

– ராமநாதபுரத்தில் 24 மணி நேரமாக பெய்து வரும் தொடர்ந்து நீடிக்கும். இந்த பருவமழையால் ராமநாதபுரம் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது. ராமநாதபுரத்தில் அதீத வேகத்தில் காற்று வீசும்.

– நீலகிரியில் அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

– கோவை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதியில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்

– திருவாரூர், நாகையில் நாளை மாலை வரை கனமழை பெய்யும்

– தமிழகத்தில் அடுத்து மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம். டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்.

– திருவாரூரில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நீடாமங்கலம் மற்றும் முத்துப்பேட்டையில் தலா 9 செ.மீ. மழை பெய்தது. பாண்டவையாறு தலைப்பில் 8 செ.மீ. மழைப்பதிவு.

– கடலூரில் விருத்தாசலம்-வடலூர் சாலையில் பெரும் வெள்ளப்பெருக்கு. ரோமாபுரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு.

– மதுரையில் மேலூர், திருவாதவூர், ஒத்தக்கடை, சிட்டம்பட்டி, கீழவளவு, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு.

– நேற்று ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பனில் தலா 11 செ.மீ. மழைப்பதிவு. திருவண்ணாமலையில் வந்தவாசி, நெற்குணம், தெள்ளார், தேசூர், சாலவேடு பகுதிகளில் மழை. தஞ்சையில் அணைக்கட்டில் 10 செ.மீ. மழை பதிவானது. வெட்டிக்காடில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளன.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img