பொய் பேசி இந்துக்களை வெறுக்கும் கூ… என குஷ்புக்கு காயத்ரி ரகுராம் பதிலடி!

சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள்
h raja kush gayathri - 2026

எச் ராஜாவை மட்டமாக குறிப்பிட்ட குஷ்புவை அதேபாணியில் பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்திருக்கிறார்.

நடிகையும் காங்கரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இதற்காக பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார் குஷ்பு.

அந்த வகையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளரான எச் ராஜாவை நடிகை குஷ்பு விமர்சித்திருக்கிறார்.

எச் ராஜாவை எச்சு ராஜா என்றும் அவர் ஒரு பைத்தியக்காரர் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை பார்த்த பாஜகவினர் குஷ்புவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் குஷ்புவுக்கு அவரது ஸ்டைலில் பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ‘கூ’ என குறிப்பிட்டு நீங்கள் மற்றவர்களின் பெயரைதான் அப்படி அழைக்க முடியும்.

பொய்களை தவிர உங்கள் வாழ்க்கையில் வேறு எதையாவது நீங்கள் பேசியிருக்கிறீர்களா? நீங்கள் சொன்ன பொய்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. நீங்கள் இந்துக்களை வெறுக்கிறீர்கள்.

உங்களை போன்ற பொய்யர்களுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் புகலிடம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விமர்சித்த நடிகர் சித்தார்த்துக்கும் காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.