நடிகை நடாஷாவுடன் புத்தாண்டைத் தொடங்கும் ஹார்திக் பாண்டியா!

சற்றுமுன் விளையாட்டு
harthik - 2026

இளம் கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சுடனான காதலை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹிந்தி பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நடாஷா, மும்பையில் வசிக்கும் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். நடிப்பு வாய்ப்புக்காக 2012 முதல் இந்தியாவில் வசிக்கும் நடாஷா, சத்யாகிரஹா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

கிரிக்கெட் வீரர் பாண்டியாவும் நடிகை நடாஷாவும் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தனது காதலை அறிவிப்பது போல நடாஷாவுடனான புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளார் பாண்டியா.

harthik pandiya 1 - 2026

புத்தாண்டை இவருடன் தொடங்குகிறேன் என்று எழுதியுள்ளார். இந்தப் புகைப்படத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் ராகுல், சஹால் ஆகியோரும் எதிர்வினையாற்றியுள்ளார்கள்.

முதுகு வலி காரணமாக சமீபகாலமாக அவதிப்பட்டு வந்த ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்குக் கடந்த செப்டம்பர் மாதம் லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. 25 வயது பாண்டியா 11 டெஸ்டுகள், 54 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

haarthik pandiya 1 - 2026

2018-ல் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியின் போது ஹார்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பல ஆட்டங்களில் விளையாடவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பாண்டியா, முதுகு வலி காரணமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கவில்லை.

மே.இ. தீவுகள் அணிகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரிலும் இடம்பெறாத பாண்டியா, நியூஸிலாந்துக்குச் செல்லும் இந்திய ஏ ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.