தங்கம் விலை குறைந்ததால்.. மக்கள் மகிழ்ச்சி!

சற்றுமுன்
gold jewellery gold chain - 2026

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.29,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.3,735-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வந்தது.

மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் எதிரொலியாலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.

அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்குப் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கத்தின் விலை அண்மைக் காலமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் புத்தாண்டு தினமான இன்று தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.29,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.