ஆரோக்கிய சமையல்: முடக்கத்தான் முறுக்கு!

சற்றுமுன்

முடக்கத்தான் முறுக்கு

mudakkathan kirai - 2026

தேவையானவை:

அரிசி மாவு – ஒரு கப்,

கடலை மாவு – அரை கப்,

வெண்ணெய் – அரை டீஸ்பூன்,

ஓமம், மிளகுத்தூள் – தலா கால் டீஸ்பூன்,

பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்,

முடக்கத்தான் இலை, புதினா – தலா ஒரு கைப்பிடி,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

mudakathan murukku - 2026

முடக்கத்தான், புதினா இலைகளை மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, ஓமம், மிளகுத்தூள், பச்சை மிளகாய் விழுது, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும்.

அத்துடன் இலைச் சாறு சேர்த்து (தேவைப் பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்), முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.