பிள்ளையார் நோன்பு விழாவில் சுவாரஸ்யம்! ஒரு கிலோ உப்பு ரூ.33,000 மாலை 16,000..!

திருச்சி லைஃப் ஸ்டைல்
karur pillaiyar nonbu - 2026

கருவூர் வாழ் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார் நோன்பு விழா செவ்வாய்க் கிழமை மாலை பி.எல்.ஏ. திருமண மண்டபத்தில் தலைவர் அக்ரி சுப.செந்தில்நாதன் தலைமையில் பொருளர் கும.குமரப்பன் முன்னிலையில் நடைபெற்றது

செயலாளர் மேலை பழநியப்பன் நோன்பின் மாண்பினை விளக்கிக் கூறி வரவேற்புரை ஆற்றினார். விநாயகர் சிறப்பு கூட்டு வழிபாடு தீபாராதனை நடைபெற்றது.

சமூகப் பெரியவர்கள் வைரவன், அருணாசலம் கெளரவிக்கப்பட்டு அவர்கள் இளை எடுத்து நோன்பு களைந்து பின் அவர்கள் கூடியிருந்த 600 பேருக்கு இளை எடுத்துக் கொடுக்க அனைவரும் நோன்பு களைந்தனர்

தொடர்ந்து வழிபாட்டில் பக்தர்களால் வாங்கி வைக்கப்பட்ட உப்பு, தேங்காய், வாழைப்பழம், சர்க்கரை, கற்கண்டு,சட்டை, ஸ்கூல் பேக், மணமாலை, குபேரன், விளக்கு, பிள்ளையார் உள்ளிட்ட 21 பொருட்களை சமூக அறங்களுக்கான நிதித் திரட்டலாய் மேலை பழநியப்பன் ஏலம் நடத்தினார்

இதில் ௹சிகரமாக உப்பு ஒரு கிலோ 33000/- மாலை 16,000 , கற்கண்டு 1 கிலோ 6000/- என மொத்தம் இரண்டு லட்சத்து ஒரு ஆயிரம் ஏலம் நடைபெற்றது

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

சிறந்த மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. குழந்தைகள் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டினர். தொடர்ந்து ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் குழுவினரின் பாட்டுப் பட்டி மன்றம் நடைபெற்றது!

இரவு 12 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ரெத்தினம், வைஷ்ணவி மெய்யப்பன், அகல்யா மெய்யப்பன், சோபிகா பழனியப்பன், கைலாசம் கணேசன், அருணாசலம் ராமையா, அழகப்பன் உள்ளிட்ட திரளானவர்களும் குளித்தலை புலியூர் அய்யர்மலை, வேலூர், புகழூர், வெள்ளியனை காந்தி கிராமம், வெங்கமேடு, தான்தோன்றி மலை பகுதி வாழ் சமூக மக்களும் பங்கேற்றனர்! 

அனைவருக்கும் சிறப்பு விருந்தும் நாட்காட்டி சிறப்புப் பரிசாய் ஜமுக்காளமும் வழங்கப்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.