ஆளுநரை பதவி நீக்கம் கோரி மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
governor purohit - 2026

தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், கடந்த 15 மாதங்களாக அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் தமிழக ஆளுநர் அதை கிடப்பில் போட்டுள்ளார். இது, அரசியல் சாசன விதிகளை மீறி தமிழக ஆளுநர் செயல்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டு, அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.