
கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்கள் முடங்கி, மக்கள் பலர் வேலையிழந்து, அன்றாட உணவுக்கே சிரமப் படும் சூழலில், சுமார் 3.60 லட்சம் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை சொந்த செலவில் வழங்கியுள்ளார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அவர் தமது எம்.ஆர்.வி டிரஸ்ட் மூலம் இந்த உதவிகளைச் செய்து வருகிறார்.
அரவக்குறிச்சி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட க பரமத்தி வடக்கு ஒன்றியம் கார்வழி , அஞ்சூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவுக்கான பொருட்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று வழங்கினார்.
கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் இதுவரை கரூர் மாவட்டத்தில் மொத்தம் 3,61,574 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.