
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்புகள் புகார் அளித்தால், உடனே செயல்படும் காவல் துறை, நாங்கள் அளிக்கும் புகார்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று இந்து முன்னணி புகார் கூறியுள்ளது. இது குறித்து ஒரு புகார் மனுவை டிஐஜி.,யிடம் அளித்துள்ளது.
இது குறித்து, இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் தெரிவித்தபோது…
இந்து மதம், கடவுள்கள் குறித்தும் இந்து தலைவர்கள் குறித்தும் அவதூறாக பேஸ்புக், யூடிப்பில் பதிவிட்டவர்கள் மீது நெல்லை சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் இந்து முன்னணி நிர்வாகிகள் பல்வேறு புகார்கள் அளித்தும் இது வரை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையே உள்ளது.
ஆனால் முஸ்லீம் அமைப்பினர் அளித்துள்ள புகார்கள் மீது இந்துக்கள் மீது உடனடியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்து வருகின்றனர்.
இந்து முன்னணியினர் அளித்துள்ள புகார்கள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் (DIG) அவர்களிடம் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அவருடன், மாநில செயலாளராகிய நான் (கா.குற்றாலநாதன்) நெல்லை மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் க.பிரம்மநாயகம், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜசெல்வம் ஆகியோர் சென்று மனு அளித்தோம்… என்றார்.
இந்து முன்னணியினர் கொடுத்த புகார் மனு:
