முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார்

சற்றுமுன் சென்னை தமிழகம்
pandian ph - 2026

முன்னாள் சபாநாயகர் பி எச் பாண்டியன் இன்று காலை காலமானார்.

நெல்லையைச் சேர்ந்தவரும் அதிமுக.,வின் முன்னாள் சபாநாயகருமான பி.எச் பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் சென்னையில் உள்ள தமது இல்லத்தில் காலமானார்.

அதிமுக மூத்த நிர்வாகியும், தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் காலமானார்.

கடந்த 1985 முதல் 89 வரை சபாநாயகராக பதவி வகித்தார். 1980 முதல் 85 வரை துணை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்த பேரியில் பிறந்த இவர், சேரன்மகாதேவி தொகுதியிலிருந்து 1977, 80, 84 ம் ஆண்டுகளில் அதிமுக சார்பில், எம்.எல்.ஏ., ஆக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.