ஐபோன் விற்பனை சரிவு! ஆப்பிள் சி.இ.ஓ.,வின் வருவாய் குறைவு!

சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல் வணிகம்
tim cook iphone - 2026

ஐபோன் விற்பனையில் சரிவைச் சந்தித்ததன் எதிரொலியாக, ஆப்பிள் நிறுவன சிஇஓ., டிம் குக்கின் கடந்த ஆண்டு வருமானத்தில் சுமார் 78 கோடி ரூபாய் சரிந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை 2019ஆம் ஆண்டில் போதிய இலக்கை எட்டவில்லை எனவும், ஆப்பிள் நிறுவனத்தில் சம்பளம் வழங்கும் முறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டுக்காக ஒட்டுமொத்தமாக சுமார் 975 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற டிம் குக், 2019ஆம் ஆண்டில் 897 கோடி ரூபாய் மொத்த சம்பளமாக பெற்றுள்ளார்.

iphone 3 - 2026

2018இல் போனசாக மட்டுமே சுமார் 86 கோடி ரூபாய் பெற்ற டிம் குக், சென்ற ஆண்டில் 55 கோடி ரூபாய் பெற்றுள்ளார். டிம் குக் தனது சம்பளத்திலிருந்து சுமார் 14 கோடி ரூபாயை தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

எனினும், ஐபோன் விற்பனையில் ஏற்பட்ட சரிவு ஆப்பிள் நிறுவன சி இ ஓ.,வின் வருவாயிலும் சரிவு ஏற்படுத்தியுள்ளது பெரிய செய்தியாக வர்த்தக உலகில் பேசப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.