
ஜனவரி 5 அன்று மகேஷ்பாபு ஹீரோவாக நடித்த சரிலேரு நீகெவ்வரு படத்தின் ட்ரையலர் நிகழ்ச்சி நடைப்பெற்றது.அதில் விஜய் சாந்தி குறித்து குறும்பு ததும்ப சிரஞ்சீவி பேசியவை ரசிகர்கள் மத்தியில் ஆராவரத்தை ஏற்படுத்தியது.
சரிலேரு நீகெவ்வரு ப்ரீ ரிலீஸ் ஈவெண்டில் விஜயசாந்தியும் சிரஞ்சீவியும் ஒரே மேடையில் தோன்றி மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சூப்பர் ஸ்டார் விஜய் சாந்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.
ஒரே ஆரவாரத்தோடு சீட்டி அடித்து ரசிகர்கள் மகிழ்ந்தனர். பல ஆண்டுகளுக்குப் பின் இரண்டு லெஜெண்டுகள் ஒரே மேடையில் தோன்றி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் விஜயசாந்தி பற்றி சிரஞ்சீவி செய்த காமெண்டுகள் மிகவும் ருசிகரமான விருந்தாக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

விஜயசாந்தியை அருகில் பார்த்தவுடன் மலரும் நினைவுகளுக்குச் சென்ற சிரஞ்சீவி அவர்களின் சினிமா உறவு பற்றிய பல ருசிகரமான தகவல்களை மேடையில் பகிர்ந்து கொண்டார்
விஜய் சாந்தி என் ஹீரோயின் என்றார். பல ஹிட் சினிமாக்களில் என்னோடு சேர்ந்து நடித்தார். தேசிய அளவில் சிறந்த நடிகையாக விருது பெற்றவர் விஜயசாந்தி.. என்று பெருமையோடு கூறினார்.
தன்னைவிட்டு 15 ஆண்டுகள் தூரமாக விலகிப்போய் மீண்டும் இன்றுதான் தென்பட்டார் என்றார் சிரஞ்சீவி. இதை அவர் கூறியதும் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி மகிழ்ந்தனர்.

மேலும் அவர், அப்போது டிநகரில் எங்கள் வீட்டு எதிர் வீட்டில் தான் விஜயசாந்தி வசித்ததாகக் கூறினார். எந்த ஒருசிறிய விசேஷத்திற்கும் கூட எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார். அவர்கள் வீட்டுக்கு நானும் செல்வேன். எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தார் என்று அவர்களது நெருக்கம் பற்றி விவரித்தார் சிரஞ்சீவி.
அவ்வாறு புகழ்ந்தபடியே தன் மனதுக்குள் இருந்த வருத்தத்தையும் சிரஞ்சீவி வெளியிட்டார்
என்னை ஏன் அப்படி தீட்டினாய் விஜயசாந்தி? உனக்கு மனசு எப்படி வந்தது? என்று கேட்டு தன் ஹீரோயினை அணைத்துக்கொண்டார்.
எனக்கு உன் மீது கோபம். எனக்கு முன்பாகவே நீ அரசியலுக்கு போய் விட்டாய். அதோடு என்னையும் திட்டினாய். வயதானாலும் உன் அழகும் திமிரும் குறையவில்லை என ரஜினியை படையப்பாவில் ரம்யாகிருஷ்ணன் கூறுவது போல இப்போதும் கூட அதே திமிர். அதே ஃபிகர். எதுவும் குறையவில்லை. என்று சிரஞ்சீவி கூறினார்.

உடனே அவர் கையிலிருந்த மைக்கைப் பிடுங்கி கொண்டு விஜயசாந்தி, “பஞ்ச் டயலாக் பேசுகிறீர்கள்… என் கையை பார்த்தீர்களா? எத்தனை ரஃப்? ரஃப் ஆடிவிடுவேன். அரசியல் வேறு… சினிமா வேறு.. நீங்கள் என் ஹீரோ… நான் உங்கள் ஹீரோயின்”என்றார்.
இருவரும் சேர்ந்து இருபதுக்கு மேல் திரைப்படங்களில் நடித்துள்ளோம். மீண்டும் இப்போது சேர்ந்து நடிப்போமா? என்று கேட்டு வம்பிழுத்தார் விஜயசாந்தி.
தன் தோழி விஜயசாந்தி மீண்டும் தன்னை சந்திக்கும்படி செய்த மகேஷ் பாபுவுக்கு நன்றி என்று கூறி சிரஞ்சீவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.