பிரதமர் பொருளாதார வல்லுநர்களுடன் பட்ஜெட் ஆலோசனை!

சற்றுமுன்
modi 4 - 2026

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து நாட்டின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஜன.,09) ஆலோசனை நடத்த உள்ளார்.

2020-2021 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வரும் பிப்.,1 ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதனால் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய பொருளாதார வளர்ச்சிக்கான அம்சங்கள் குறித்து பொருளாதார நிபுணர்களுடன், மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

இதற்கு முன் கடந்த ஜூன் மாதம் 40 பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதே போன்று நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சலுகை அறிவிப்புக்கள், உள்கட்டமைப்பிமைப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகியன இந்த ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

2019-20 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி 5 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதுடன், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையிலும் பட்ஜெட்டை தயாரிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பிற்காக மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என பிரதமர் நேற்று கேட்டிருந்த நிலையில், இன்று பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.