தேக்கடியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்களுடன் நாளைமுதல் மலர் கண்காட்சி துவங்குகிறது. கேரள மாநிலம், தேக்கடியில் 11வது மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர்கள், நூற்றுக்கணக்கான மூலிகைச்செடிகள், அலங்கார மற்றும் தோட்டச்செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி நாற்றுகள் இடம் பெறுகின்றன. மேலும் வேளாண் கருத்தரங்கம், பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டி, சமையல் போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டரங்கம், மீன் கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சியும் இடம்பெற உள்ளன. கண்காட்சி நாளை தொடங்கி ஏப். 23ம் தேதி முடிவடைகிறது.
Popular Categories



