இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

Published:

redrice - 2026

சிவப்பரிசி ஆப்பம்

தேவையானவை :

சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம்

உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு

வெந்தயம் – 2 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் -தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

red rice aappam - 2026

சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும்.

பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

Related articles

Recent articles

spot_img