சேஞ்சுக்கு மட்டுமில்ல சுவைக்கும் சேமியா பகளாபாத்!

சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
semiya - 2026

சேமியா பகளாபாத்
தேவையானவை:
சேமியா – ஒரு கிண்ணம்
தயிர் (புளிக்காதது) – முக்கால் கிண்ணம்
பால் – அரை கிண்ணம்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
கடுகு, உளுத்தம்பருப்பு, -கால் தேக்கரண்டி
கடலைப்பருப்பு – தலா கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை,கொத்துமல்லி – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

வெறும் வாணலியில் சேமியாவை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, சூடானதும் வறுத்த சேமியாவைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

பிறகு தண்ணீரை நன்கு வடிகட்டி, அதனை ஆறவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

அத்துடன் வேக வைத்த சேமியா, தயிர், உப்பு சேர்த்து கிளறவும். பிறகு பாலை தளர சேர்த்துக் கலக்கவும். நிறைவாக கொத்துமல்லி சேர்க்கவும். சேமியா பகளாபாத் ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.