ரவிக்குமாரின் எம்.பி., உறுதிமொழியை மீறிய தேசவிரோத கருத்து: காய்ச்சி எடுக்கும் டிவிட்டர்வாசிகள்!

Published:

thirumavalavan ravikumar - 2026

இவர் எம்.பி.,யா? எழுத்தாளரா? இவரை எம்.பி., ஆக்கிய மதுரை மக்கள் அறிவாளிகளா என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூகத் தளங்களில்! காரணம், எம்.பி., ரவிக்குமார் பதிவு செய்துள்ள டிவிட்டர் பதிவும், அதன் பின்னணியும்தான்!

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து எம்.பி. ரவிக்குமார் பதிவு செய்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், தாம் ஏற்றுக் கொண்ட பதவிப் பிரமாண உறுதிமொழிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் கருத்துப் பதிவு செய்துள்ளார் ரவிக்குமார்.

அவரது டிவிட்டர் பதிவில்…
அயல் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடலாமா?

ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தில் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என பாராளுமன்ற மக்களவை தலைவர் கடிதம் எழுதி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் உள்விவகாரங்களில் அயல்நாடுகளில் தலையிடக்கூடாது என்ற வாதம் இதில் வைக்கப்படுகிறது. மேலோட்டமாக பார்த்தால் இது ஏற்புடையது தான். ஆனால் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் என்பது அயல் நாடுகளின் விவகாரங்களில் தலையிடும் ஒன்றாகும்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

அந்த திருத்தச்சட்டம் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தால் அவர்களில் குறிப்பிட்ட மதங்களைச் சேர்ந்தவர்களுக்குக் குடியுரிமை தருவோம் என்று கூறுகிறது.
இது அந்த நாடுகளின் உள் விவகாரங்களில் அப்பட்டமாக தலையிடுவது தவிர வேறு ஒன்றும் அல்ல.

அண்டை நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு சட்டம் ஒன்றை இயற்றி விட்டு அந்த சட்டத்தைப் பற்றி பேசக்கூடாது என சொல்வது எந்த தர்க்கத்துக்கும் உட்பட்டதாக இல்லை. – என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ரவிக்குமாரின் சிந்தனைக் கோளாறை பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர். இவர் எல்லாம் எப்படி எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்கிறார் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

@VNarambu யோவ்
உன்னையெல்லாம் அறிவாளி என்று நினைத்து மதித்தேன். ஆனால் நீரோ ஒரு மலப்புழு என்று நிரூபிக்கிறீர்கள்.
இதை விட தேசத்திற்கு எதிரான ஒரு பதிவை பார்க்க முடியுமா?
இந்த பதிவும் ஒன்று தான் என் நாட்டை காட்டி குடுப்பதும் ஒன்று தான்.
த் தூ

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Ganesan Sankaran @_ganesans
by your argument, we should never take in any refugees from any country including Sri Lankan Tamils as that would be acting against that Country and demeaning it – So think before tweeting

அந்த நாட்டில் இருந்து வாங்க என இந்தியா அழைத்தால் தான் நீங்கள் சொல்லும் அந்த பிரச்சனை!
#CAA சட்டத்தில் இங்கு அகதிகளாக வருபவருக்கு தான் குடியுரிமை!
ஆக….. முரசொலி படிப்பதை நிறுத்தவும்! கொஞ்சமாவது அறிவை வளர்கவும்! ௐ ProudHindu???????? @isitso15

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img