முள்ளு குத்திச்சு… அவ்ளோதான்! படப்பிடிப்பை முடிச்சுட்டுதான் திரும்புனேன்: ரஜினி!

Published:

rajini pear grills - 2026

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நிகழ்ச்சியான மேன் வெர்சஸ் வைல்ட்- படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தனக்கு முள் குத்தியது அவ்வளவுதான் என்றும், தாம் படப்பிடிப்பை முடித்துவிட்டே திரும்பியதாகவும் கூறினார்.

பிரிட்டனின் முன்னாள் ராணுவ வீரர் பியர் கிரில்ஸ் தற்போது வனப்பகுதியில் பிரபலங்களுடன் சேர்ந்து எடுத்து வரும் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார். உலகம் முழுதும் பிரபலமான நிகழ்ச்சி, இந்தியாவில் பிரதமர் மோடி பங்கேற்றதால் பிரபலம் அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினியும் பங்கேற்றுள்ளார்.

rajini injuries - 2026

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திபூர் புலிகள் வனப்பகுதியில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. இதில், பியர் கிரில்ஸ் உடன் இணைந்து நடிகர் ரஜினி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சி விரைவில், டிஸ்கவரி அல்லது நேஷனல் ஜியோகிராபி சேனலில் ஒளிப்பரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிக்கு தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாகவும், இதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் பரப்பப் பட்டன. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறிய போது, ரஜினி நலமுடன் இருக்கிறார் என்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு ரஜினி சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்ட போது, ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஷோவுக்கான சூட்டிங் முடித்து திரும்பி வருகிறேன். எனக்கு ஏதோ பெரிய காயம் ஏற்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அதுபோல் எதுவும் இல்லை. சும்மா முள்ளுங்க லேசாக குத்திச்சு அவ்வளவுதான், வேறு பெரிய காயம் எதுவுமில்லை என்றார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img