தெலுங்கானாவில் ட்ரம்பின் தீவிர பக்தர் ஒருவர், ட்ரம்பின் சிலை அமைத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உபவாசமிருந்து பூஜை செய்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்.24 இந்தியா வருகிறார். டிரம்பின் சுற்றுப் பயணத்திற்காக பிரதமர் மோடி எத்தனை ஆவலோடு எதிர்பார்க்கிறோரோ அதைவிட ஆவலோடு தெலங்காணாவைச் சேர்ந்த ட்ரம்பின் தீவிர பக்தர் தன் தெய்வத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் எதிர்நோக்கியுள்ளார்.
ஜனகாம் மாவட்டம் பச்சன்னபேட்ட மண்டலத்திலுள்ள கொன்னெ என்ற கிராமத்தைச் சேர்ந்த புஸ்ஸா கிருஷ்ணா அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர பக்தர். ட்ரம்புக்கு கோயில் கட்டி அவருடைய 6 அடி உயரமான விக்ரகத்தை வைத்து பூஜை செய்து வருகிறார். ட்ரம்ப் மீது இவருடைய அன்பும் பக்தியும் பார்த்து முதலில் நண்பர்கள் எல்லாம் கேலி செய்தாலும் பின்னர் பழக்கமாகிவிட்டது அவர்களுக்கு.
இவருக்கு ட்ரம்பின் மீது உள்ள பக்தியின் காரணமாக இவரை ட்ரம்ப் கிருஷ்ணா என்று ஊரில் அழைக்கத் தொடங்கி விட்டார்கள். இவருடைய வீட்டைக் கூட ட்ரம்ப் ஹவுஸ் என்று குறிப்பிடுகிறார்கள். எந்த வேலையைத் தொடங்கினாலும் முதலில் அங்கு ட்ரம்ப் போட்டோவை வைத்து வணங்கி விட்டுதான் தொடங்குகிறார்.
அமெரிக்க அதிபர் இந்திய சுற்றுப்பயணம் வருவதால் தன்னுடைய வழிபாட்டுக்குரிய தெய்வத்தை சந்திக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று டிரம்பின் தீவிர பக்தர் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய-அமெரிக்க உறவுகள் பலமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். ட்ரம்ப் நீண்ட ஆயுளோடு இருப்பதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உபவாசம் இருக்கிறேன். எந்த வேலையும் ஆரம்பித்தாலும் முதலில் ட்ரம்ப் போட்டோவை வணங்கி விட்டுத்தான் ஆரம்பிப்பேன். அவரை பார்க்க வேண்டும் சந்திக்க வேண்டும் என்று ஆசை உள்ளது . என் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று அரசாங்கத்தை கோரியுள்ளேன் என்று ட்ரம்ப் பக்தர் தெரிவிக்கிறார்.
ட்ரம்ப் என்றால் இவருக்கு எத்தனை பைத்தியம் என்றால் தன் கைவிரலை பிளேடால் கீறிக்கொண்டு அந்த ரத்தத்தால் படத்துக்கு பொட்டு வைக்கிறார். இவருடைய போன் பௌச்சில் கூட ட்ரம்ப் போட்டோ இருக்கிறது. டி-ஷர்ட் மீது கூட ட்ரம்ப் என்று எழுதப் பட்டுள்ளது.
இத்தகைய தீவிர பக்தர் டிரம்புக்கு அவருடைய சொந்த நாடான அமெரிக்காவில் கூட இருக்க மாட்டார். சோசியல் மீடியா செய்தித்தாள்களில் அவற்றை பற்றிய செய்தி வைரல் ஆனதால் அந்த விஷயம் டிரம்பின் பார்வைக்குச் சென்றது. விரைவிலேயே உங்களை சந்திப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்விட்டர் மூலம் வாக்குறுதி அளித்துள்ளார் .
இப்பொழுது அவர் வரும்போது தன் பக்தருக்கு தரிசன பாக்கியம் கொடுப்பாரா மாட்டாரோ?! பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!