என்ன.. நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் இறந்துட்டாரா?! ஏம்யா இப்படி?!

Published:

sundarrajan1 - 2026

நடிகரும், இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், அது வதந்தி என அவரது மகன் அசோக் தெரிவித்துள்ளார்.

தாராபுரத்தில் பிறந்தவர் நடிகர் ஆர்.சுந்தர்ராஜன். திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் பரிமளிப்பவர். அம்மன் கோவில் கிழக்காலே, மெல்லத் திறந்தது கதவு, ராஜாதி ராஜா, தாலாட்டு பாடவா, பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், குங்குமச் சிமிழ் உள்ளிட்ட ஹிட் படங்கள் பலவற்றை இயக்கியவர்.

இவர் குறித்த வதந்தி சமூகத் தளங்களில் நேற்று பரவிய நிலையில், அவரது மகன் அசோக் சுந்தர்ராஜன், தனது சமூகத் தளப் பகிர்வில், அவர் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார். தற்போது சென்னையில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறார். அவருக்கு எந்தக் குறையும் இல்லை. தயவுசெய்து வதந்திகள், மீம்ஸ்களைப் பரப்பாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Related articles

Recent articles

spot_img