அனைத்து நாடுகளின் அமைதி படையினரின் இந்த ஆண்டுக்கான குற்றப் பின்னணி குறித்த விபரத்தை ஐ.நா., அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அமைதி படையினர் மீது எந்தவொரு பாலியல் குற்றச்சாட்டும் இல்லை. கடந்த ஆண்டும் இந்திய படையினர் மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவாகவில்லை. இந்திய படையினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றி வருவதால் ஏதாவது நடந்தால் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளின் அமைதி படையினருக்கு எதிராக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த 2 அமைதி படை வீரர்கள் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்றொரு வீரருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.



