அஜித் விஜய்யை ஓரங்கட்ட சூர்யா திட்டம்?

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
suriya - 2026

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத் வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா ரசிகர்களும் அதையே விரும்புக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படமும் ஏப்ரல் 9ம் தேதி தான் ரிலீசாகிறது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடேக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

vijay - 2026

எனவே சூரரைப் போற்று படமும், மாஸ்டர் படமும் ஒரே நாளில் வெளியானால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் சூர்யா – ஹரி 6வது முறையாக இணைய உள்ள அருவா படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிவித்துள்ளார்.

ajith valimai - 2026

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தையும் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடவே படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த இரு படங்களும் மோதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே சூர்யா ஒரே ஆண்டில் விஜய் மற்றும் அஜித்துடன் நேரடியாக மோதிப்பார்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.