தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து தகவல் அளித்தார் தமிழக சுகாதாரச் செயலர் பியூலா ராஜேஷ். அவர் இன்று தெரிவித்ததாவது…
தமிழ்நாட்டில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்ட 48 பேரில் 42 பேர் தில்லி தப்ளிக் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள்.
தமிழகத்தில் மொத்தம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. தில்லி சென்று வந்தவர்களில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 679 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 738 பேரில் 5 பேர் தவிர மற்றவர்கள் உடல் நலத்துடன் உள்ளனர்.
தில்லி தப்ளிக் இ ஜமாஅத் மாநாட்டுக்குச் சென்று வந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 679 பேரில் 7 பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதை அடுத்து, கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை சென்னையில் 156 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்திலேயே கொரோனா பாதித்தவர்கள் அதிகமுள்ள இடமாக சென்னை உள்ளது. இங்கு 156 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.