ஊரடங்கு: 2 மாதம் இலவசம்! கூகுள் அறிவித்த அதிரடி!

சற்றுமுன் தொழில்நுட்பம்
google stadia - 2026

கூகுள் தனது கிளவுட் கேமிங் சேவையான ஸ்டேடியா புரோ சேவையை இப்பொழுது இலவசமாகியுள்ளது. கூகுளின் இந்த கேமிங் ஸ்டேடியா சேவை அடுத்த இரண்டு மாதங்களுக்கு 14 நாடுகளில் இலவசமாகக் கிடைக்குமென்று அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனமான கிளவுட் கேமிங் சேவையான Google Stadia Pro சேவையை 14 நாடுகளில் இலவசமாகியுள்ளது. இந்த ஸ்டேடியா புரோ சேவைக்கான சந்தா கட்டணம் சுமார் 130 டாலர் ஆகும், இந்த கட்டண தொகையைக் கூகுள் தற்பொழுது தள்ளுபடி செய்துள்ளது.

இதனால் மக்கள் கோவிட்-19 லாக்டவுனுக்கு மத்தியில் வீட்டிலேயே தங்கியிருப்பதால் அவர்களுக்கு மேலும் பொழுது போக்கான விஷயமாக இரண்டு மாத இலவச சந்தா இருக்கும் என்று கூறியுள்ளது. அதன் பிறகு, ஸ்டேடியா புரோ ஒரு மாதத்திற்கு 9.99 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஸ்டேடியா தளத்திற்குப் புதிதானவர் என்றால் இந்த முறையைப் பின்பற்றிப் பதிவு செய்துகொள்ளுங்கள். ஸ்டெடியா ப்ரோ சந்தாவைப் பதிவுபெற Link என்ற வலைத்தளத்திற்குச் செல்லவும். நீங்கள் ஆண்ட்ராய்டு பயனர் என்றால் ஸ்டேடியா பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.

நீங்கள் iOS பயனர் என்றால் அதற்கான ஸ்டேடியா பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த (HID இணக்கமான) யூ.எஸ்.பி ஆதரவு கொண்ட மவுசு அல்லது கீபோர்டு மூலம் உங்கள் லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது குரோம் ஓஎஸ் டேப்லெட்டில் ஸ்டேடியாவை விளையாடத் தயாராகுங்கள். கூகுள் பிக்சல் போன் அல்லது பலவிதமான ஆண்ட்ராய்டு போன்களில் வைஃபை மூலம் உங்களுக்கு பிடித்தமான கேமை விளையாடுங்கள்.

இந்த சேவையை கூகுள் நிறுவனம் அமெரிக்கா, கனடா, யூகே, ஐயர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய 14 நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த சேவையை கூகுள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலவச ஸ்டேடியா ப்ரோ சேவை அடுத்த 48 மணி நேரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.