
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மிக அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதிலும் புளியந்தோப்பு பகுயில் மட்டும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அந்த 10 பேர் வசிக்கும் தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் கொரோனா வைரஸ் பாதிப்புடன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.