வெளி மாவட்டங்களுக்குச் செல்ல… ஆன்லைனில் இ-பாஸ் விண்ணப்பிப்பது எப்படி?

சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
tnepass2

வெளிமாவட்டத்திற்கு செல்ல ஆன்லைனில் E-Pass-க்கு விண்ணப்பிப்பது எப்படி?

பயண பாஸ் என்பது அவசர மருத்துவ தேவை, பிரசவம், உறவினர்களின் இறப்பு மற்றும் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது .

இ பாஸ் கோரி இணையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவற்றுக்கு செல்ல ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முன்னர் அந்த அந்த மாவட்டத்தின் உள்ள மாவட்ட வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் ஈ-பாஸ் விண்ணப்பிக்க அதற்கான லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மின்நுழைவுச் சீட்டிற்கான ( e – Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும் அந்த விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகம் வழியாக பெறப்பட்டு வந்த்து. மாவட்டங்களின் வலைத்தளப் பக்கத் தொகுப்பு…

ஆனால் தற்போது, தமிழக அரசின் ஒருங்கிணைந்த இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்டங்களின் இணையதள முகவரியின் முகப்புப் பக்கத்துக்குச் சென்றாலும், அது https://tnepass.tnega.org/#/user/pass என்ற டிஎன் இ பாஸ் பக்கத்துக்குதான் இட்டுச் செல்கிறது. எனவே நேரடியாகவே மேற்கண்ட https://tnepass.tnega.org/#/user/pass பக்கத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் கைபேசி எண்ணுக்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

யாரெல்லாம் விண்னப்பிக்கலாம், யாருக்கெல்லாம் இபாஸ் கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் இந்த வலைத்தளப் பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.

1 thought on “வெளி மாவட்டங்களுக்குச் செல்ல… ஆன்லைனில் இ-பாஸ் விண்ணப்பிப்பது எப்படி?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.