தமிழ் நாட்டில் உள்ள கோயில்களை தக்க நடவடிக்கையோடு திறக்க கோரி தமிழகத்தில் உள்ள முக்கியமான திருக்கோயில்களின் முன்பும் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இன்று காலை 10.30க்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் முன்பு தோப்புக்கரணம் போட்டு தமிழக அரசுக்கும் அறநிலைய துறைக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி, மாவட்டச் செயலாளர் சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், தென்காசி நகர தலைவர் இசக்கிமுத்து, பொதுச் செயலாளர் நாராயணன், செயலாளர் பாலாஜி, பிஜேபி தென்காசி பார்வையாளர் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன், Bjp மாவட்ட தலைவர் sc அணி மகேஷ், மாவட்ட அமைப்பாளர் சபரி மணி, பிஜேபி தென்காசி நகர Sc அணி சந்திரன் Bjp நகர பொதுச்செயலாளர் ராஜ்குமார், செங்கோட்டை நகர பொதுச் செயலாளர் ஹிந்து முன்னணி மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.