கொரோனா: துணை நிலை ஆளுநர் அலுவலத்தில் 10 பேருக்கு தொற்று!

Published:

corono

தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் அலுவலகத்தில் 10 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

புது தில்லியின் சிவில் லைன்ஸ், ராஜ் நிவாஸ் மார்க்கில் அமைந்துள்ள தில்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதையடுத்து, அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். முடிவுகள் வரும் வரை வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், துணை நிலை ஆளுநர் அலுவலகத்தின் கிளையில் முதலில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 10 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று சாதகமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, மேலும் 210 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 8,171 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,98,706-ஐ எட்டியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img