விமான பயண விதிமுறைகள்! என்னென்ன அறிவோமா?

சற்றுமுன்
flight 1

விமானங்கள் இயக்கப்படுவதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி,

கொரோனா அறிகுறிகள் உள்ள யாரும் விமானத்தில் பயணிப்பதற்கு அனுமதி இல்லை.

மகாராஷ்டிரா, தில்லி மற்றும் குஜராத்திலிருந்து விமானம் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு பிசிஆர் சோதனை கண்டிப்பாக எடுக்கப்படும்

சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். இல்லையென்றால் 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் .

பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே இ பாஸ் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு பயணியும் சோதனைக்கு பின்னரே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

அறிகுறி இருப்பின் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தொழில் சம்பந்தமாக விமானம் பயணம் மேற்கொள்வோர் 48 மணி நேரத்தில் திரும்பி வருவோருக்கு தனிமைப்படுத்தப் படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்

அனைத்து பயணிகளுக்கும் அழியாத மையால் தனிமைப்படுத்தப்படுவதற்கான முத்திரை குத்தப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.