பொது மக்களை நேரடியாக சந்திக்கிறது அதிமுக அரசு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

rajendrabalaji
சிவகாசி அருகே கிருஷ்ணபேரி கிராமத்தில் பொதுமக்களிடம் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குறைகளை கேட்டறிந்து மனு வாங்கினார்.

சிவகாசி: அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று
குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது என்றார்
கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி!

அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது என்று சிவகாசி அருகே கிருஷ்ணபேரி கிராம மக்களிடத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

சிவகாசி தொகுதி கிருஷ்ணபேரி கிராமத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கிராம மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேடடரிந்து மனு வாங்கினார். முதியோர் உதவித்தொகை. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டார்.

பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் பேசும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

அரசை தேடி பொதுமக்கள் சென்ற நிலை மாறி மக்களை நோக்கி அரசு உதவிகள் என்பதன் அடிப்படையில் அதிமுக அரசு தொகுதி மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது. அதன் அடிப்படையில் இந்த கிராமத்திற்கு நான் உங்களை தேடி வந்துள்ளேன்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

அனைத்து மனுக்களையும் விரைந்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிவகாசியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீரை நாங்கள் கொடுத்துள்ளோம். இனி சிவகாசி தொகுதியில் தண்ணீர் பற்றாக்குறை என்பதே ஏற்படாதவாறு தாமிரபரணி தண்ணீர் கொடுத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

சிவகாசி சட்டமன்ற தொகுதியின் முதல் பூத் என்ற வகையில் கிருஸ்ணபேரி மக்கள் அதிமுகவிற்கு என்றும் ஆதரவாக இருந்துள்ளீர்கள். உங்களுககாக நாங்கள் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருப்போம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு குறைகளை கூறலாம் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணபேரி ஊராட்சி மன்ற தலைவர் வினோதினிஅபிமன்னன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்திமான்ராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, மாவட்ட கவுன்சிலர் வேல்ராணி உமாலட்சுமி திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் lவேல்ராணிஉமாலட்சுமி, ராஜபாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகையாபாண்டியன், கிருஷ்ணபேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி, ஊராட்சி செயலாளர் சுந்தர்ராஜ், கிளை செயலாளர்கள் நிறைமதி ஆறுமுகம், இந்திராநகர் அய்யனார், கிருஷ்ணபேரி அய்யனார் இளைஞரணி ஒன்றிய செயலாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக் உட்பட பலா் கலந்து கொண்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories