
மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வியாழக்கிழமை கொரோனா பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப் பட்டனர்.
கொரோனாவை கட்டுபடுத்தும் விதமாக அரசு பல்வேறு கட்டநடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நீதி மன்றங்களும், அவ்வப்போது தகுந்த ஆலோசனைகளை வழங்கி வரும் நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்ற வாசலில் வியாழக்கிழமை காலை கொரோனா பரிசோதனை செய்த பிறகே, நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்ட நீதிபதி நசீமா பானு மற்றும் இதர நீதிபதிகளும், மாஜிஸ்திரேட்டுகளும் தாங்களாகவே முன் வந்து பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை