
தமிழகத்தில் இன்று 8ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டியது; தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது! இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,000ஐக் கடந்தது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1,515 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது! சென்னையில் மட்டும் இன்று 1,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
சென்னையில் இன்று 5ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 1,000ஐக் கடந்தது. சென்னை: இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1156 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 269ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 604 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதை அடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,999ஆக உயர்ந்துள்ளது.
பிற நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
குவைத், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 7 பேருக்கும், தில்லியிலிருந்து தமிழகம் திரும்பிய 7 பேருக்கும், மகாராஷ்டிரத்தில் இருந்து தமிழகம் திரும்பிய 2 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
சென்னை அடுத்து , செங்கல்பட்டு மாவட்டத்தில் 135 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 55 பேருக்கும்,
காஞ்சிபுரம் மாவட்டத்த்ல் 16 பேருக்கும் கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
