கொரோனா: பிரபல தயாரிப்பாளரின் சகோதரர் உயிரிழப்பு!

Published:

danajayan

தமிழ்த் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் சகோதரர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியதாவது:

கொரோனா வைரஸ் என்னுடைய சகோதரரை எடுத்துக்கொண்டு விட்டது. 59 வயதில் நல்ல உடல்நலத்துடன் இருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 நாள்களில் உயிரிழந்து விட்டார். அவருடைய மனைவியும் மகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மீண்டு வருகிறார்கள், சிலர் உயிர் இழக்கிறார்கள். இதனால் நாங்கள் அதிர்ச்சியில் உள்ளோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் நண்பர்களே என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான காற்றின் மொழி, மிஸ்டர் சந்திரமெளலி ஆகிய படங்களைத் தயாரித்த தனஞ்ஜெயன் அடுத்ததாக கபடதாரி என்கிற படத்தைத் தயாரித்து வருகிறார். ஜூன் 1 அன்று அவருடைய தாயார் காலமானார். இதையடுத்து தனது சகோதரரையும் இழந்துள்ளார்.

திரையுலகப் பிரபலங்கள் பலரும் தனஞ்ஜெயனின் சகோதரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Related articles

Recent articles

spot_img