தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்!

Published:

corona virus
corona virus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,842 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 66,538 என அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மேலும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை  1,450 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் தமிழகத்தில் இதுவரை 60, 592 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 4280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தில் 3ஆவது நாளாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4,000ஐ தாண்டியது என்பது குறிப்பிடத் தக்கது. 

இதை அடுத்து தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,07,001 பேராக உயர்வு கண்டுள்ளது.  தற்போது சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் கண்டறியப் பட்டுள்ளது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்கு இப்போது கொரோனா பரவியுள்ளதாகவே தெரிகிறது. சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 2438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு தகவல்:

corona july
corona july

Related articles

Recent articles

spot_img