spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு!

மதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு!

- Advertisement -
madrrai covid centre
madrrai covid centre

மதுரை மாவட்டம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள கோவிட் கேர் சென்டரை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது தெரிவிக்கையில்:

உலகத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி சவாலாக இருக்கின்ற கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர் கொண்டு தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போர்க்கால அடிப்படையிலே பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

அதில் 100 சதவீதம் விழிப்புணர்வை உருவாக்குகின்ற வகையிலே முகக்கவசம் அணிவது, கைகளை சோப்பு போட்டு கழுவுவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது,
வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்ப்பது போன்ற அறிவுரைகளை முதலமைச்சர் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்து கொண்டிருக்கிறார்கள். வருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

கவனக்குறைவாகவோ, எதிர்ப்பு சக்தி குறைவாகவோ இந்த நோய்த் தொற்று ஏற்படுகின்ற போது ,அவர்களை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து குறிப்பாக கண்காணிப்பு பணியாளர்கள் வீடுவீடாக சென்று தர்மா மீட்டர் கொண்டு காய்ச்சலை கண்டறிய மிகத்தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்

இப்போது ஊரடங்கு காலத்தில் நோயை கண்டறிவதற்காக மருத்துவ பரிசோதனையை அதிகப்படுத்தி இருக்கிறோம். நோய் அறிகுறியோடு தீவிர சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அனைத்து வசதிகளுடன் கோவிட் கேர் சென்டர்களான தோப்பூரில் 247 படுக்கைளும், தியாகராஜர் கல்லூரியில் 700 படுக்கைகளும் வேளாண்மைக் கல்லூரியில் 530 படுக்கைகளும், காமராஜர் பல்கலைக்கழகத்தில் 530 படுக்கைகளும் என மொத்தம் 2007 படுக்கைகள் உள்ளன

இவற்றுடன் சேர்த்து யாதவா கல்லூரி, மீனாட்சி கல்லூரி, லேடி டோக் கல்லூரி, வெள்ளச்சாமி நாடார் கல்லூரி, கள்ளிக்குடி காமராஜர் கல்லூரி, ஹோமியோபதி கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, சின்ன உடைப்பு கூட்டுறவு மேலாண்மை நிலையம், உசிலம்பட்டி அருளானந்தர் கல்லூரிää கிருஷ்ணா கல்வி நிறுவனம் என மொத்தம் 22 இடங்களில் 3030 படுக்கைள் தயார் நிலையில் உள்ளன.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கோவிட் கேர் சென்டரில் நோயாளிகள் அனுமதிக்கின்ற நிலை இன்னும் வரவில்லை. இருப்பினும் உடனடியாக பயன்படுத்துகின்ற வகையில் தயார் நிலை உள்ளது.

மதுரைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் மதுரை உச்சப்பட்டி தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவனை அமைய 246 ஏக்கர் தயார் நிலையில் உள்ளது. அதில் 224 ஏக்கர் எடுத்துள்ளார்கள். ரூ.1246 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் கூட்டுறவு முகமை ஜிக்கார் நிதி உதவியோடு புரிந்துணர்வு நிலையிலே நாம் தயார் நிலையில் இருக்கின்றோம். அதற்கான இந்திய அரசின் கெஜட் வெளியீடு நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த ஆய்வை தொடர்ந்து வடபழஞ்சி தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த பொருளாதார மையத்தில் உள்ள கோவிட் கேர் சென்டர் அமைப்பதற்காக வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர்
ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது ,மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய்,
மதுரை மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன், கூடுதல் ஆட்சியர்(மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை) ப்ரியங்கா பங்கஜம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe